அந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை; ரூமுக்கு போனதும்...கதறிய கே எல் ராகுல்

Swetha
in கிரிக்கெட்Report this article
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோல்வி குறித்து கே எல் ராகுல் பேசியுள்ளார்.
அந்த அழுத்தம்
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ஏகானா மைதானத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி மிக எளிதாக 235 ரன்கள் குவித்தது.
குறிப்பாக இந்த மைதானத்தில் இதுவரை 200 ரன்களை எந்த அணியும் தாண்டியதில்லை. அந்த வகையில் லக்னோ அணியின் மோசமான பந்து வீச்சால் கொல்கத்தா அணி எளிதாக 235 ரன்கள் எடுத்தது. இந்த மிக பெரிய இலக்கை சேஸிங் செய்த லக்னோ அணி அதிரடியாக ஆட முயன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களுக்கு அவுட் ஆனது.
இந்த படுதோல்விக்கு பிறகு பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல், "இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் மிக அதிக ரன்களை எடுக்க வேண்டி இருந்தது. மிகப் பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும் போது அதிரடியாக ஆட முயன்று விக்கெட்களை இழப்போம். ஒட்டு மொத்தத்தில் நாங்கள் மோசமாக செயல்பட்டு இருக்கிறோம்.
கே எல் ராகுல்
பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் நாங்கள் மோசமாக செயல்பட்டு இருக்கிறோம். சுனில் நரைன் மற்றும் ஃபில் சால்ட் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி எங்களுக்கு கடுமையான அழுத்தத்தை அளித்தனர். எங்கள் இளம் பந்துவீச்சாளர்களால் அந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. ஆனால் இது தான் ஐபிஎல்.
இங்கே நாம் சிறந்த வீரர்களுக்கு எதிராக நாம் ஆட வேண்டியிருக்கும். அப்போது நமது திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த பிட்ச்சில் 235 ரன்கள் என்பது மிகவும் அதிகம். 20 முதல் 30 ரன்கள் கூடுதலாகவே அடிக்கப்பட்டது. எங்கள் பந்து வீச்சாளர்கள் தங்களால் இயன்றதை முயற்சி செய்து பார்த்தார்கள்.
ஆனாலும் இவர்கள் இளம் பந்துவீச்சாளர்கள். விரைவாக கற்றுக் கொண்டால் அணிக்கு மிகவும் நல்லது. கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டம் எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது. நாங்கள் அறைக்கு சென்றவுடன் முதல் பேச்சே இது குறித்து தான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.