ராகுல் பிரச்சாரம்; காங்கிரஸ் பேனரில் பாஜக வேட்பாளர் புகைப்படம் - கூட்டத்தில் சலசலப்பு!

Indian National Congress BJP Madhya Pradesh
By Swetha Apr 08, 2024 10:15 AM GMT
Report

ராகுல் காந்தி பேரணி நிகழ்ச்சியின் பேனரில் தவறுதலாக பாஜக வேட்பாளர் புகைப்படம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ராகுல் பிரச்சாரம்

மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடத்தி வருகிறார்.இதில்,அந்த தொகுதியில் மத்திய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கன் சிங் குலாஸ்தே மற்றும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான ஓம்கார் சிக் மார்க்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ராகுல் பிரச்சாரம்; காங்கிரஸ் பேனரில் பாஜக வேட்பாளர் புகைப்படம் - கூட்டத்தில் சலசலப்பு! | Rahul Rally Bjp Candidate Photo In Congress Banner

இவர்கள் இருவரும் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டதில், பக்கன் சிங் குலாஸ்தே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.தற்போது இவர்கள் மீண்டும் மோதுவதால் போட்டி கடுமையாகியுள்ளது. இந்த பேரணி நிகழ்ச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கார் சிக் மார்க்கமை ஆதரித்து ராகுல் அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு

பாஜக வேட்பாளர்

இந்த நிலையில், அந்த நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்து. ஆனால் பேனர் அடித்தவர்களின் அலட்சியத்தால் அந்த பேனரில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஃபக்கன் சிங் குலஸ்தே புகைப்படம்,காங்கிரஸ் தலைவர் ஹர்வன்ஷ் சிங் படத்திற்கு பதிலாக இடம்பெற்றுவிட்டது.

ராகுல் பிரச்சாரம்; காங்கிரஸ் பேனரில் பாஜக வேட்பாளர் புகைப்படம் - கூட்டத்தில் சலசலப்பு! | Rahul Rally Bjp Candidate Photo In Congress Banner

நிகழ்ச்சி துவங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக இதனை கவனித்த காங்கிரஸ் கட்சியினர் பதற்றமடைந்தனர். இதையடுத்து, அதை எப்படியாவது மறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஒரு நபரை அங்கு கூட்டி வந்துஃபக்கன் சிங் குலஸ்தே புகைப்படம் உள்ள இடத்தின் முன்பு நிற்க வைத்து அவரது படத்தை மறைத்தனர்.

சிறுது நேரம் கழித்து வந்த மற்றொரு நபர் ஸ்டிக்கர் கொண்டுவந்து ஒட்டி தவறான புகைப்படத்தை மறைத்தார். இருப்பினும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.