நடனக்காரி ஐஸ்வர்யா ராயை தான் கூப்பிட்டாங்க.. ராகுல்காந்தி பேச்சு - வெடித்த சர்ச்சை!
ராகுல் காந்தி நடிகை ஐஸ்வர்யா ராயை நடனக்காரி என்று குறிப்பிட்டது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
பயணத்தில் இருந்த ராகுல் காந்தி வாரணாசியில் நடைபெற்ற நகழ்ச்சியில் பேசியிருந்தார். அதில் அனைத்து ஊடகங்களும் அம்பானி, அதானி-க்கு சொந்தமானது. அவர்கள் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் பிரச்னைகளை காட்டப் போவதில்லை.
சர்ச்சை பேச்சு
அவர்களால் முடியாது. ஊடகங்களில் எதையாவது காட்ட வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ராய் நடனம் ஆட வேண்டும். பிரதமரை 24 மணி நேரமும் காட்டவேண்டும். அமிதாப்பச்சனையும் காட்டவேண்டும். என்று கூறியிருந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி, சமூகத்தினர்கள் ஒதுக்கப்பட்டனர்.
அவர்களை அழைக்காமல், நடனக்காரி ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் ஆகியோர்தான் அழைக்கப்பட்டனர் எனத் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.