உடைக்க முடியாத அன்பு ; ராகுல் வெளியிட்ட வீடியோ-கண்கலங்கிய பிரியங்கா..!
ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரக்ஷா பந்தன்
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.
இது அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை வலுப்படுத்தும் பண்டிகை ஆகும். மேலும் வட மாநிலங்களில் கொண்டாப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டப்படுகிறது. இந்த நிலையில் தனது தங்கை பிரியங்கா காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,''சகோதர சகோதரிகளுக்கு இடையே உடையாத அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும்.எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் வாழ்த்து
அதே போல பிரியங்கா காந்தி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'' சகோதர சகோதரிகளுக்கு இடையிலான உறவு ஒரு மலர் போன்றது,
அதில் மரியாதை, அன்பு மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில், வெவ்வேறு வண்ண நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான உறுதிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.