சாதிவாரி கணக்கெடுப்பு; மோடி கண்முன்னே அது நடக்கும் - எச்சரித்த ராகுல்காந்தி!
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாதி வாரி கணக்கெடுப்பு
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கும் மக்களின் எண்ணிகை 59லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,
ராகுல் காந்தி கருத்து
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியை வழங்கும் கொள்கை கட்டமைப்பை உருவாக்குவது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுத்துவிடலாம் என பிரதமர் மோடி கனவு காண்கிறார். எந்த சக்தியாலும் அதை தடுக்க முடியாது.
மக்கள் தீர்ப்பளிக்க தயாராகி விட்டார்கள். விரைவில் 90 சதவிகிதம் மக்கள் சாதி மாறி கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்துவார்கள்.
மக்களின் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால், அடுத்துவரும் பிரதமர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை பிரதமர் மோடி கண்முன் பார்ப்பார் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.