பாஜகவால் ஒரு போதும் தமிழர்களை ஆள முடியாது - ராகுல் காந்தி வீடியோ வைரல்!

Tamils Rahul Gandhi Tamil nadu BJP Lok Sabha Election 2024
By Karthikraja Jun 04, 2024 01:11 PM GMT
Report

  ராகுல் காந்தி தமிழ்நாடு பற்றி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

கூட்டணி ஆட்சி

2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (4 ஜூன் 2024 ) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

பாஜகவால் ஒரு போதும் தமிழர்களை ஆள முடியாது - ராகுல் காந்தி வீடியோ வைரல்! | Rahul Gandhi Viral Speech About Tamilnadu

தற்போதைய கள நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 294 இடங்களிலும், இந்தியா கூட்டணி 231 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய அளவில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சியே அமையும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்த ராகுல்..மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்த ராகுல்..மனதார நன்றி சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ராகுல் காந்தி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதியில் பிற கட்சிகள் முன்னிலை வகித்தாலும் மாலையில் கள நிலவரம் மாறியது.மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே முன்னிலையில் உள்ளது. 

இதையடுத்து, 2022 ம் ஆண்டு குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி "உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருபோதும் தமிழக மக்களை ஆள மாட்டீர்கள். அதை உங்களால் செய்ய முடியாது" என கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.