2024 மக்களவை தேர்தல் முடிவுகள் - மெஜாரிட்டி பெற எத்தனை சீட்..? தனி பெரும்பான்மை பெறுமா பாஜக?
இன்று காலை 8 மணி முதல் பதிவான மக்களவைக்கான வாக்கு எண்ணும் பணிகள் துவங்குகின்றன.
மக்களவை தேர்தல்
நாட்டை அடுத்து ஆளும் அரசு எது என்று ,முடிவு செய்யும் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி 7 கட்டங்களாக கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.
காலை முதலே கட்சிகள், சுயேட்சைகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தேர்தல் முடிவுகள் வெளிவருகின்றன
பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணிக்கும் மத்தியில் தான் போட்டி நிலவுகிறது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப்பெருமான்மையாக 303 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 272 இடங்களை வென்றால், ஒரு கட்சி தனிப்பெரும்பான்மைனையுடன் ஆட்சி அமைந்திடும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்றுள்ள தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கு மத்தியில் தான் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலுடன் சேர்ந்து ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகரி மோச்சா கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளன.