த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி!

Vijay Indian National Congress Rahul Gandhi India Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Jun 27, 2024 02:47 AM GMT
Report

விஜய்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி! | Rahul Gandhi Thanks To Tvk Vijay

இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்!

பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா; என்ன அவசியம் இருக்கு..? கொந்தளித்த பெற்றோர்!

ராகுல் காந்தி

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்.

த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி! | Rahul Gandhi Thanks To Tvk Vijay

நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய்க்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஒவ்வொரு இந்தியனின் குரல் ஒலிக்கும் போதும் நமது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. நன்றி விஜய்" என குறிப்பிட்டுள்ளார்.