பங்குச்சந்தை மோசடி; பறிபோன ரூ.38 லட்சம் கோடி - silent ஆக வேலை பார்த்த மோடி, அமித்ஷா?
பங்கு சந்தை மோசடி குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
பங்குச் சந்தை
இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் உள்ள நிலவரம்படி பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தை காலை தொடங்கியபோதே கடும் சரிவை எட்டியுள்ளது. அன்றைய நிலவரப்படி, நிப்டி 850 புள்ளிகள் சரிவுடன் 22 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
இதனால் சென்செக்ஸ் அதிகப்படியாக 73,659.29 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 22,566.95 புள்ளிகள் சரிந்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 390.02 புள்ளிகளுடன் அதாவது 0.54% ஏற்றத்துடன் தொடங்கியது.
பறிபோன பணம்
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திபில் இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது அவர், மே 13 -ம் தேதி, ஜூன் 4-க்கு முன்பாக பங்குகளை வாங்குங்கள் என்கிறார் அமித் ஷா. அடுத்து மே 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பங்குச் சந்தை ரெக்கார்ட் பிரேக் செய்யும்.
ஜூன் 4-க்குள் வாங்குங்கள் என்று பிரதமர் வலியுறுத்துகிறார். ஜூன் 2 மாலை எக்ஸிட் போல் வெளியாகிறது. பி.ஜே.பி மாபெரும் வெற்றி என்கிறார்கள். அமித் ஷா மற்றும் மோடி சொன்னது போல ஜூன் 3-ல் பங்குச் சந்தை ரெக்கார்ட் பிரேக் செய்கிறது. வரலாறு காணாத உச்சத்துக்குச் செல்கிறது.
ஜூன் 4 மொத்தமாக பங்குச் சந்தை கீழே விழுகிறது.இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மக்கள் பணம் ரூ.38 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் யாருக்காகவோ துணை போயுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். எக்ஸிட் போல் நடத்தியவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக கூட்டு நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.