தரையை தட்டிய சென்செக்ஸ்..மெல்ல மீளுமா? இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
இந்திய பங்கு சந்தை நேற்று எதிர்பாராத விதமாக கடும் சரிவை சந்தித்துள்ளது.
பங்குச் சந்தை
இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் உள்ள நிலவரம்படி பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தை காலை தொடங்கியபோதே கடும் சரிவை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, நிப்டி 850 புள்ளிகள் சரிவுடன் 22 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
இன்றைய நிலவரம்
இதனால் சென்செக்ஸ் அதிகப்படியாக 73,659.29 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 22,566.95 புள்ளிகள் சரிந்தது. இந்த நிலையில், இன்று காலை 9:37 மணியளவில் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 390.02 புள்ளிகளுடன் அதாவது 0.54% ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
அதேசமயம் நிஃப்டி 50 101.50 புள்ளிகளை பெற்று 21,943.40 ஆகவும் உள்ளது. பங்குச் சந்தை பச்சை நிறத்தில் திறந்து, ஆரம்ப வர்த்தகத்தில் அதன் அனைத்து லாபங்களையும் இழந்த பிறகு, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இப்போது உயர்ந்து வருகின்றன.
நிஃப்டி 50 குறியீட்டு எண் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் 4 அன்று வீழ்ச்சியடைந்தது. நேற்றைய நாளின் முடிவில் நிஃப்டி 50 குறியீடு 1379 புள்ளிகளை இழந்து 21,884 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடிவு செய்தது. நேற்று கடும் சரிவை சந்தித்த பங்கு சந்தை இன்று மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.