ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் தலை துண்டித்து கொடூர கொலை - ராகுல் காந்தி கண்டனம்

Rahul Gandhi
By Nandhini Jun 29, 2022 06:07 AM GMT
Report

ராஜஸ்தானில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தவரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு

சமீபத்தில் ஞானவாபி மதவழிபாடு தலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் அக்கட்சி நீக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுபுர் சர்மாவுக்கு ஆதவாக பதிவிட்ட தையல் கடைக்காரர்

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் என்பர் தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

கொலை மிரட்டல்

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக கண்ணையாவை போலீசாரால் கைது செய்தனர். இதனையடுத்து, சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த கண்ணையாவிற்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்தது வந்தது. இதனால் பயந்த கண்ணையா காவல் நிலையத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால், போலீசார் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

தலை துண்டித்து படுகொலை

நேற்று மாலை கண்ணையாவின் தையல் கடைக்கு சென்ற ரியாஸ் அக்தரி மற்றும் ஹவூஸ் முகமது ஆகிய 2 பேர் வாடிக்கையாளர்கள் போல் நடித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணையாவின் தலையை துண்டாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர், பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்து வீடியோவை வெளியிட்டனர்.

போராட்டம் வெடித்தது

இச்சம்பவத்தை கண்டித்து ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Rahul Gandhi

ராகுல் காந்தி கண்டனம்

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த இந்த படுகொலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உதய்பூரில் நடந்த கொடூரக் கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

மதத்தின் பெயரிலான வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை விரட்டுவோம். மேலும், அனைவரும் சகோதரத்துவத்தையும், அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.