நீட் தேர்வு பணக்காரர்களுக்கு - ஏழை மாணவர்கள் எதிர்காலத்தில் அக்கறை இல்லை!! ராகுல் கடும் கண்டனம்!
இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நேற்று மக்களவையில் ஆளும் பாஜக அரசு மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
ராகுல் காந்தி விமர்சனம்
மக்களவை தேர்தலுக்கு பிறகு கூடிய நாடாளுமன்றம் நேற்று பெறும் சலசலப்புகளை உண்டாக்கியது. முன்னதாக, குடியரசுத் தலைவரின் உரையின்போது மணிப்பூர், நீட், அக்னிபாத் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு விஷயங்களில் மத்திய ஆளும் அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சிவன் படத்தை ஒன்றை காட்டியவர், இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம் என குறிப்பிட்டு அதிரடியாக தொடர்ந்து பேசினார்.
நீட் தேர்வில்
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாமல், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவரின் கருத்திற்கு நாட்டின் பிரதமர் மோடி, உடனே எழுந்து பதிலளித்தார். மணிப்பூர், மோடி அவரை பற்றி கூறியது, பாஜக ஹிந்து விமர்சனம் போன்றவற்றையெல்லாம் பேசுவ ராகுல், நீட் தேர்வு குறித்தும் பேசினார். இந்த தேர்விற்காக பல ஆண்டுகளாக மாணவர்கள் தயாராகிறார்கள்.
ஆனால், அவர்கள் இந்த தேர்வினை நம்பவில்லை . இது பணக்காரர்களுக்காக வடிமைக்கப்பட்டுள்ளது. தகுதி படைத்தவர்களுக்கு அல்ல என மாணவர்களே நம்புகிறார்கள். நான் சந்தித்த ஒவ்வொரு நீட் தேர்வு எழுதும் மாணவரும் இதே கருத்தை தெரிவித்து, ஏழை மாணவர்களுக்கு இத்தேர்வு உதவாது என்றனர் என்றார்.
மேலும்,. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை இத்தேர்வின் வினாத்தாள் கசிந்துள்ள என பகிரங்கமாக குற்றம்சாட்டிய ராகுல், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லை என விமர்சித்தார்.