மக்களவையில் அசந்து தூங்கிய ராகுல் காந்தி? சுட்டிக்காட்டிய எம்.பி.க்கள் வைரலாகும் வீடியோ!
மக்களவையில் அசந்து தூங்கிய ராகுல் காந்தி வீடியோ வைரலாகி வருகிறது.
தூங்கிய ராகுல் காந்தி
பாராளுன்றத்தில் நடத்த மக்களவைக் கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து மத்திய பாராளுமன்ற மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி ஒரு பக்கம் சாய்ந்து தூங்கும் அமர்த்திருந்தார். இதனைப் பார்த்த கிரண் ரிஜிஜூ தனது உரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ராகுல் காந்தி தூங்குவதைச் சுட்டிக்காட்டினார்.
வைரலாகும் வீடியோ
உடனே, கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் அமர்ந்திருந்த பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக எம்.பிக்கள் விழுந்து சிரிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், ராகுல் காந்தி தூங்கும் அந்த வீடியோவையும் புகைப்படத்தையும் பாஜக மற்றும் வலதுசாரி,
Hey @RahulGandhi are you sleeping on such an important debate.
— Sumit Joshi (@iSumitjoshi) August 8, 2024
Hey @INCIndia you chose a immature LOP and now people are suffering because he is busy in personal work.
How our senior leader are working for the people of Bharat especially when a bill introduced for minorities… pic.twitter.com/iE0fkQFHhc
அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றன. ஆனால், ராகுல்காந்தி கண்களை மூடியபடி அமர்த்திருந்தாரா அல்லது தூங்கிக்கொண்டிருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.