20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் - பட்டியலிட்டு விமர்சித்த ராகுல் காந்தி

Rahul Gandhi Narendra Modi
By Karthikraja Jun 11, 2024 01:06 PM GMT
Report

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடி அமைச்சரவை

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்கள் என மொத்தம் 71 பேர் பதவி ஏற்றனர்.

modi cabinet

இதில் 61 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள், 11பேர் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இதன் பின் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் அனைவருக்கும் இலாகா ஒதுக்கப்பட்டது. 

அமைச்சரவை பங்கீடு - கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்

அமைச்சரவை பங்கீடு - கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்

ராகுல் காந்தி

வாரிசு அரசியலுக்கு எதிராக பாஜக பேசிவிட்டு தற்போது அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் ,”“கட்சிக்காக பாடுபட்டவர்கள், தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையே வாரிசு அரசியல் என விமர்சித்தார் மோடி. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன. அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?”எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வாரிசுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.  


 1. எச்.டி. குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மகன்

2. ஜெய்ந்த் சௌதரி, முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் மகன்

3. ராம்நாத் தாக்குர், முன்னாள் பிகார் முதல்வர் கர்பூரி தாக்குர் மகன்

4.ராவ் இந்திர்ஜித் சிங், முன்னாள் ஹரியாணா முதல்வர் ராவ் பிரேந்திர சிங் மகன்

5. ராவ்நீத் சிங் பிட்டு, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பீண்ட் சிங் பேரன்

6. சிரஜ் பஸ்வான், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன்

7.ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன்

8. ராம் மோகன் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடு மகன்

9. பியூஸ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன்

10. தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் மகன் 

 11. ஜெ.பி.நட்டா, முன்னாள் ம.பி. அமைச்சர் ஜெயஸ்ரீ பானர்ஜி மருமகன்

12. ஜிதின் பிரசாதா, முன்னாள் எம்பி ஜித்தேந்திர பிரசாத் மகன்

13. கீர்த்தி வர்தன் சிங், முன்னாள் உபி அமைச்சர் மஹாராஜ் ஆனந்த் சிங் மகன்

14. அனுப்ரியா படேல், பகுகன் சமாஜ் கட்சியின் நிறுவனர் சோனேலால் படேல் மகள்

15. கிரண் ரிஜிஜு, முன்னாள் அருணாச்சல் பேரவைத் தலைவர் ரின்சின் காருவின் மகன்

16. ரக்ஷா காட்ஸே, முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் காட்சேவின் மருமகள்

17. கமலேஷ் பஸ்வான், முன்னாள் எம்பி வேட்பாளர் ஓம் பிரகாஷ் பஸ்வான் மகன்

18. சாந்தனு தாக்குர், முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் மஞ்சுள் கிருஷ்ணா தாக்குர் மகன்

19. விரேந்திர குமார், முன்னாள் மபி அமைச்சர் கௌரிசங்கர் சகோதரர்

20. அன்னபூர்ணா தேவி, முன்னாள் பிகார் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவ் மனைவி