ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

Rahul Gandhi
By Sumathi May 05, 2023 05:55 AM GMT
Report

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு! | Rahul Gandhi Sentenced Jail Judge Has Promoted

இதன் காரணமாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில், ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பதவி உயர்வு

இதனைத் தொடர்ந்து ராகுல், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரத் நீதிபதி ஹெச்.எஸ். வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர் தான் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.