என் போனை ஒட்டுக்கேட்கிறது அரசு - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி!
அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது போனை ஒட்டுக்கேட்பதாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தற்போது 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இவர் கலிபோர்னியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சேர்ந்த அமிடி மற்றும் ஷான் சங்கரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
அவர்களுடன் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்கள் குறித்து நிபுணர்கள் குழுவின் விவாதத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார்.
பேட்டி
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும்.
எனது ஐ போன் கூட ஒட்டுக்கேட்கப்படுவது எனக்கு தெரியும். அப்போது அவர் தனது ஐ போனில் மிஸ்டர் மோடி என கூறினார். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.
ஒரு அரசு உங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்க வேண்டும் என நினைத்தால் யாரும் உங்களை தடுக்க முடியாது.
இது எனது உணர்வு. தொலைபேசியை ஒட்டு கேட்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தால் அதை ஒன்றும் செய்யமுடியாது.
நான் எதை செய்ய நினைத்தாலும், வேலை செய்தாலும் அது அரசுக்கு தெரியும்.
அது நாட்டின் நன்மைக்காகவே இருக்கும்" என்று கூறினார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.