Friday, May 9, 2025

அடுத்து மேடையிலேயே மோடி கண்ணீர் சிந்துவார்..ஆனால் !! ராகுல் காந்தி

Rahul Gandhi Narendra Modi Karnataka Lok Sabha Election 2024
By Karthick a year ago
Report

தேர்தல் பரப்புரை சுவாரசியம் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.

மக்களவை தேர்தல்

நாட்டின் மக்களவை தேர்தல் மிக மும்முரமாக நடந்து வருகின்றது. கட்சி தலைவர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். பாஜக தலைமையிலான NDA கூட்டணி, எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணி என தேசிய அளவில் இரு முனை போட்டி நிலவுகிறது.

rahul-gandhi-says-modi-will-cry-in-stage-bjp-india

நாட்டின் அநேக தலைவர்கள் பிரச்சார காலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மோடியை குறித்து பல இடங்களிலும் விமர்சனத்தை வைத்து வருகின்றார்.

உங்கள் நிலத்தை பறித்து வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு அளிப்பார்கள் - பிரதமர் மோடி

உங்கள் நிலத்தை பறித்து வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு அளிப்பார்கள் - பிரதமர் மோடி

கண்ணீர் விடுவார்

இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா மாநில பிஜப்பூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் அப்போது பேசியது வருமாறு,  பிரதமரின் பேச்சை கேட்டிருப்பீர்கள், அவர் பயப்படுகிறார்.

rahul-gandhi-says-modi-will-cry-in-stage-bjp-india

மேடையில் அவர் கண்ணீர் விடக்கூடும். அக்னிபாத் அறிமுகப்படுத்தி ராணுவ பணியை இளைஞர்களிடம் இருந்து பறித்தார். நாட்டின் 70 கோடி பேரின் வளம் சில கோடிஸ்வரர்களிடம் கொடுத்துள்ளார்.

rahul-gandhi-says-modi-will-cry-in-stage-bjp-india

கோடீஸ்வரர்களுக்கு மோடி கொடுத்த பணத்தை ஏழைகளுக்கு கொடுப்போம். அவர் சீனா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி பேசுவார். உங்களை கைதட்ட வைப்பார், உங்களின் மொபைல் லைட்டை ஆன் செய்ய சொல்வார்.