உங்கள் நிலத்தை பறித்து வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களுக்கு அளிப்பார்கள் - பிரதமர் மோடி
நாட்டின் பிரதமர் மோடி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
மக்களவை தேர்தல்
நாட்டின் மக்களவை தேர்தல் மிக மும்முரமாக நடந்து வருகின்றது. கட்சி தலைவர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். பாஜக தலைமையிலான NDA கூட்டணி, எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணி என தேசிய அளவில் இரு முனை போட்டி நிலவுகிறது.
நாட்டின் அநேக தலைவர்கள் பிரச்சார காலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். நாட்டின் பிரதமர் மோடி, நாடெங்கிலும் பெரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
சொத்துகளை
மேற்குவங்கத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு, நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் மேற்கு வங்கம் உந்து சக்தியாக இருந்தது. ஆனால் இடதுசாரி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ஊழல் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கிறது. விவசாயிகளையும் இது பாதிக்கிறது. சண்டையிடுவது போல காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் நடிக்கின்றன. ஆனால், உண்மையில் இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான்.
சமரச அரசியலுக்காக இரு கட்சிகளும் எதையும் செய்யும். அதற்காக தான் அவர்கள் போட்டியிடுகிறார்கள். நாங்கள் நாட்டின் நலனுக்காக எடுத்த முடிவுகளை நீக்கிட அவர்கள் விரும்புகிறார்கள். ஏழை மக்களின் நகைகள், சொத்துகள் உள்ளிட்ட சொத்துகளையும் ஆய்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் இந்த அறிவிப்பை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்காமல், மவுனமாக ஆதரிக்கிறது. உங்கள் நிலங்களை பறித்து அதனை வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை குடியமர்த்த உள்ளது திரிணாமுல் காங்கிரஸ்.