7 மாநில இடைத்தேர்தல்; பாஜக தந்திரம் தகர்ந்துள்ளது - ராகுல் காந்தி
7 மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங்கும் வெற்றிபெற்றுள்ளனர்.இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இதில் அவர் கூறியதாவது, மக்களிடம் குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் பாஜகவின் தந்திரம் , 7 மாநில இடைத்தேர்தல் வெற்றி மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது.
7 राज्यों में हुए उपचुनाव के नतीजों ने स्पष्ट कर दिया है कि भाजपा द्वारा बुना गया ‘भय और भ्रम’ का जाल टूट चुका है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 13, 2024
किसान, नौजवान, मज़दूर, व्यापारी और नौकरीपेशा समेत हर वर्ग तानाशाही का समूल नाश कर न्याय का राज स्थापित करना चाहता है।
अपने जीवन की बेहतरी और संविधान की रक्षा के…
சர்வாதிகாரத்தை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மேம்படவும், அரசியலமைப்பைக் காக்கவும் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். சர்வாதிகாரத்தை ஒழிக்க விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர் வாக்களித்துள்ளனர்.