சானிட்டரி பேட் மீது ராகுல் காந்தியின் போட்டோ - வெடித்த சர்ச்சை!
நாப்கின் பாக்ஸில் ராகுல் காந்தியின் போட்டோ இடம்பெற்றுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சட்டசபை தேர்தல்
பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் பிரதான கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் உள்பட பிற கட்சிகள் இருக்கின்றன. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக கள பணியில் இறங்கியுள்ளனர்.
நாப்கின் திட்டம்
அந்த வகையில், காங்கிரஸ் ‛பத்மன்’ பட பாணியில் மாநிலத்தில் உள்ள 5 லட்சம் பெண்களுக்கு இலவச ‛சானிட்டரி நாப்கின்’ வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த ‛நாப்கின்’ பாக்ஸின் மேல்புறம் ராகுல் காந்தியின் போட்டோ இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ‛‛சானிட்டரி பேட் மீது ராகுல் காந்தியின் போட்டோவை பொறித்து பீகார் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சி. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிக்கு பெண்கள் பாடம் புகட்டுவார்கள்” என கூறியுள்ளார்.