வயநாட்டை துறந்த ராகுல் - வேட்பாளராக களமிறங்கும் பிரியங்கா! அதிகாரபூர்வ அறிவிப்பு
2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்திர பிரதேசத்தின் ரைபரெலி, கேரளாவின் வயநாடு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ள அவர், இரண்டில் ஒன்றை 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
கடந்த முறை அவர், உத்திரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுலுக்கு துணை நின்றது வயநாடு தான். உத்திரபிரதேச அரசியல் களத்தில் கால்ப்பதிக்கவேண்டிய அவசியத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே ராகுல் விரும்புவார் என பலரும் கூறினார்.
களமிறங்கும் பிரியங்கா
இந்த நிலையில் தான் கேடு நாளை முடிவடையும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த ராகுல், தான் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இது வரை தேர்தல் அரசியலில் களம் காணாத பிரியங்கா முதல் முறை தேர்தலை போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.