பை சொல்லும் ராகுல்..ஹாய் சொல்லும் பிரியங்கா! வயநாடு தேர்தலில் போட்டி?
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
வயநாடு
2019-ஆம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதி ராகுல் காந்தியை கைவிட்டாலும், அவருக்கு வரவேற்பை கொடுத்தது வயநாடு. கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்திக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் தனது பதவியை பெற்றார்.
இம்முறையும் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். அதே நேரத்தில் அவர் ரைபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். 2'இல் அவர் வயநாடு தொகுதியை தான் கைவிடுவார் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விலகல்
காங்கிரஸ் கட்சி கேரள மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பலத்துடன் உள்ளது. ஆகையால், ராகுல் இங்கு resign செய்தால், அடுத்து அவருக்கு பதிலாக தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்குவார் என தகவல்கள் வெளிவருகின்றன.
இதுவரை தேர்தலில் போட்டியிடாத பிரியங்கா முதல் தேர்தலாக நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை தான் சந்திப்பார் என பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் இன்னும் ராகுல் காந்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி பாஜக பின்னுக்கு தள்ளியுள்ள காரணத்தால், அதே முனைப்பில் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க கூட்டணி கட்சிகள் தயாராகும் என்பதால், ரைபரேலி தொகுதியை ராகுல் கைவிட மாட்டார் என்ற ஒரு கருத்தும் உள்ளது.