கூட்டணி விரிசல்...செல்வப்பெருந்தகை என்ன கட்சி தலைமையா? தேசிய தலைமை பரபரப்பு கருத்து!!

Indian National Congress Tamil nadu DMK
By Karthick Jun 14, 2024 06:50 AM GMT
Report

கடந்த சில நாட்களாக செல்வப்பெருந்தகை பேசும் கருத்துக்களை அவர் கூட்டணியில் இருந்து விலக முயற்சிக்கிறார் என்றே அரசியல் வல்லுநர்கள் பேசினார்கள்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி

தேசிய தேர்தலிலும், தமிழக தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வலுவாகவே உள்ளது. 2019-ஆம் ஆண்டின் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதல் முறை முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின் தான்.

DMK Congress alliance

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 இடமும், புதுச்சேரியில் 1 இடம் போட்டியிட்டு திமுக கூட்டணி உதவியுடன் அனைத்தையும் வென்றுள்ளது.

அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்ல..இது மதவெறி அரசியல்!! செல்வப்பெருந்தகை காட்டம்

அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்ல..இது மதவெறி அரசியல்!! செல்வப்பெருந்தகை காட்டம்

விளக்கம் 

கட்சி தலைமைகள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், அண்மையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம் என பேசியது சலசலப்புகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.

Selvaperunthagai comedy

தமிழகத்தில் தனித்து பயணிக்கும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளதா? என்றெல்லாம் எழுதப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பெரிய இலக்கு இல்லாத காரணத்தால், கட்சியில் பெரிய வலிமையையும் இல்லாமல் இருப்பது உண்மை தான். இது குறித்து தான் காங்கிரஸ் தேசிய தலைமை பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

Indian National Congress

அதன்படி, தமிழகத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவு செய்யும். கூட்டணி குறித்து முடிவ செய்ய செல்வப்பெருந்தகை கட்சி தலைமை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது. இது மறைமுகமாக விமர்சனமே ஆகும். தேசிய தலைமை மாநில தலைவருக்கு ஒரு குறிப்பு தெரிவித்துள்ளது.