திருமணம் எப்போது? மீண்டும் எழுந்த கேள்வி..ராகுல் காந்தி சொன்ன பதில்!

Rahul Gandhi Viral Video India
By Swetha Aug 27, 2024 09:00 AM GMT
Report

திருமணம் குறித்து மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்திய உரையாடல் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள கல்லூரி மாணவிகளுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி உரையாடல் நடத்தினார். அப்போது ராகுல்காந்தியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திருமணம் எப்போது? மீண்டும் எழுந்த கேள்வி..ராகுல் காந்தி சொன்ன பதில்! | Rahul Gandhi Replys Marriage Question By Students

அந்த உரையாடல் வீடியோ, ராகுல்காந்தியின் 'யூ டியூப்' சேனலில் வெளியாகி உள்ளது. அதில், "திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தம் வருகிறதா?" என்று மாணவிகளிடம் ராகுல்காந்தி கேட்டார். அவர்கள் அதே கேள்வியை ராகுல்காந்தியிடம் கேட்டனர்.

வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி?

வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி?

திருமணம் எப்போது?

அதற்கு ராகுல்காந்தி, "திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன்" என்று புன்னகையுடன் கூறினார். இதை தொடர்ந்து, "திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறீர்களா?" என்று மாணவிகள் கேட்டனர்.

திருமணம் எப்போது? மீண்டும் எழுந்த கேள்வி..ராகுல் காந்தி சொன்ன பதில்! | Rahul Gandhi Replys Marriage Question By Students

அதற்கு ராகுல்காந்தி, "நான் திட்டமிடுவது இல்லை. அதுவாக நடந்தால் நடக்கும்" என்று தெரிவித்தார். "எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள்" என்று மாணவிகள் ஒரே குரலில் தெரிவித்தனர். அதற்கு "அழைக்கிறேன்" என்று சிரிப்பலைகளுக்கு மத்தியில் ராகுல்காந்தி கூறினார்.