இதெல்லாம் யார் கேட்பது - யார் இவ்வளோ விலையுர்ந்த கோட் வாங்கி தராங்க?? ராகுல் கேள்வி
மோடிக்கு யார் இவ்வளவு விலையுர்ந்த கோர்ட் சூட்களை வாங்கி தருகிறார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி பிரச்சாரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உத்திரப்பிரதேச மாநில ரேபரேலியில் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு வரும் 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய கட்சிகள் காரசார குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றன. ராகுல் காந்தி குறிப்பாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.
யார் வாங்கி தருகிறார்கள்
ரேபரேலியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ஒரு நாளில் 3 - ஆக ஒரு மாதத்துக்கு 90 கோட் அணிகிறார் பிரதமர் என கூறி, அவர் அணியும் ஒரு கோட்டின் விலை 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என சுட்டிக்காட்டினார்.
நாடு பிரதமரின் சம்பளம் ஒன்றரை லட்சம்தான் என்ற ராகுல் காந்தி, இந்நிலையில் இவ்வளவு விலையுர்ந்த கோட்களை மோடிக்கு யார் வாங்கித் தருகிறார்கள்? என்று வினவினார்.
தொடர்ந்து பேசிய ராகுல், கோட் போலவே பிரதமர் அணியும் விலை உயர்ந்த காலணிகளை யார் வாங்கித் தருகிறார்கள்? என்றும் இவற்றை ஊடகங்கள் கேட்காதா?" என வினவினார்.