அதானி குழுமம் முறைகேடு.. விமர்சித்த ராகுல் காந்தி - கொந்தளித்த கங்கனா!
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர் என்று நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதானி குழுமம்
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்த 413 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது.
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அதிகமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார்.
கங்கனா ரனாவத்
இது குறித்து கங்கனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'' ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர், அவர் கசப்பானவர், விஷம் நிறைந்தவர், அழிவுகரமானவர், அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தையும் அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டம்.
நேற்றிரவு ராகுல் காந்தி ஒப்புதல் அளித்ததாக நமது பங்குச் சந்தையை குறிவைத்து ஹிண்டன்பெர்க் அறிக்கை ஈரமாக மாறிவிட்டது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.
திரு காந்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள், நீங்கள் எப்படி துன்பப்படுகிறீர்களோ, அந்த வகையில் இந்த தேசத்தின் மக்களின் பெருமை, வளர்ச்சி மற்றும் தேசியத்தை அனுபவிக்க தயாராகுங்கள். அவர்கள் உங்களை ஒருபோதும் தலைவராக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.