அதை விட அரசியல் வாழ்க்கை கடினமானது; இதுதான் காரணம் - எம்.பி. கங்கனா ரனாவத்!
சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பாஜக எம்.பி.கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்தது போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்யா சிங்கை சுமார் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இதனிடையே பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தை சி.ஐ.எஸ்.எப் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்தை கண்டித்து அவரை அறைந்ததாக பெண் காவலர் கூறியிருந்தார்.
இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பாஜக எம்.பி.கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கடினமான வாழ்க்கை
அவர் கூறியதாவது "எனது முதல் படமான 'கேங்க்ஸ்டர்' படத்திற்குப் பிறகே எனக்கு அரசியல் வாய்ப்புகள் வரத் தொடங்கின. சினிமாவை போன்றது அல்ல. இது ஒரு கடினமான வாழ்க்கை.
ஒரு நடிகராக படப்பிடிப்புகளுக்கும், திரையரங்குகளுக்கும் சென்று நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். நடிகர்களின் வாழ்க்கை மென்மையானது. இதன் காரணமாகவே அரசியல் வாழ்க்கையை புரிந்து கொள்ள எனக்கு நீண்ட காலம் பிடித்தது.
இந்த வாழ்க்கை மிகவும் கடினமானது. மருத்துவர்களைப் போலவே பிரச்சினைகள் உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க வருவார்கள். படம் பார்க்கப் போகும்போது நிம்மதியான மனநிலையுடன் செல்லலாம். ஆனால் அரசியல் அப்படிப்பட்டது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.