மத்திய அரசு கொடுத்த சர்ப்ரைஸ் - நெகிழ்ச்சியில் ராகுல் காந்தி!
சுனேரி பாக் சாலையில் உள்ள 5-ம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு வழங்க மத்திய அரசு முடிவு
ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது டெல்லி துக்ளக் லேனில் உள்ள 12-ம் எண் வீடு மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு மோடியை குறித்து பேசியதாக கூறி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது .
இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்து தனது தாய் சோனியா வீட்டில் தங்கினார். அதன் பிறகு அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி திரும்ப வழங்கப்பட்து துக்ளக் லேன் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அந்த வீட்டில் குடியேறவில்லை.
மத்திய மந்திரி அந்தஸ்து
இந்த நிலையில் 2024 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருகிறார். இவை மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.
அதன்படி சுனேரி பாக் சாலையில் உள்ள 5-ம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது .
அதனை உறுதிசெய்யும் வகையில் ராகுல் காந்தியின், கட்சியின் பொதுச்செயலாளரும் தங்கையுமான பிரியங்கா நேற்று அந்த வீட்டை பார்வையிட்டுள்ளார்.