அம்பானி வீட்டு திருமணத்தில் செலவு செய்த பணம் யாருடையது தெரியுமா? ராகுல் காந்தி

Rahul Gandhi Narendra Modi Mukesh Dhirubhai Ambani
By Karthikraja Oct 01, 2024 03:01 PM GMT
Report

இந்திய வீரர்களிடமிருந்து தியாகி அந்தஸ்தை பறிக்கவே அக்னி பாத் திட்டம் தொடங்கப்பட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஹரியானா தேர்தல்

ஹரியானா மாநிலத்தில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்னிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. 

rahul gandhi in haryana

ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்தார் தெரியுமா? அது யாருடைய பணம்? அது உங்கள் பணம். 

அம்பானி மகனுக்கு 1 கோடி அபராதம் - என்ன காரணம்?

அம்பானி மகனுக்கு 1 கோடி அபராதம் - என்ன காரணம்?

ராகுல் காந்தி 

ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை நடத்த முடியும். இந்தியாவில் 25 பேரின் திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்யும் முறையை நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார். உண்மை என்னவென்றால், உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் எடுக்கும்போது இந்த 25 பேரின் பாக்கெட்டுக்குள் பணம் செல்கிறது. 

rahul gandhi in haryana

ஹரியானா மக்கள் ராணுவத்தில் சேர்வது வழக்கம். ஆனால் மோடி கொண்டு வந்த அக்னிபாத் போன்ற திட்டங்கள் ஓய்வூதியம், கேன்டீன் மற்றும் இந்திய வீரர்களிடமிருந்து தியாகி அந்தஸ்தை பறிக்க தொடங்கப்பட்டதாகும்.

ஹரியானாவில் போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் சிக்கியபோது, ​​நீங்கள் யாரைப் பிடித்தீர்கள், யாரை சிறைக்கு அனுப்பினீர்கள்? என மோடியிடம் கேட்க விரும்புகிறேன் என பேசினார்.