அம்பானி மகனுக்கு 1 கோடி அபராதம் - என்ன காரணம்?
ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அனில் அம்பானி
பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி(Anil Ambani), முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் ஆவார். 2006 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து பிரிந்து தனியாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
இவர் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் பவர்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டிபென்ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஹெல்த் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
5 வருட தடை
2008 ஆம் ஆண்டு உலக பணக்கார வரிசை பட்டியலில் 6 வது இடத்தில் இருந்த அணில் அம்பானி, சில காலத்தில் கடனில் சிக்கி, கடனை செலுத்தாத நிலையில் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போது முகேஷ் அம்பானி பிணை வழங்கினார்.
தற்போது சிறுது சிறிதாக மீண்டு வரும் அனில் அம்பானிக்கு, நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சில மாதங்களுக்கு அவருக்கு 25 கோடி அபராதம் விதித்ததோடு, 5 வருடம் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதித்து செபி உத்தரவிட்டது.
ஜெய் அன்மோலுக்கு அபராதம்
இந்நிலையில் இன்று(24.09.2024)) ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குனர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் அளித்த புகாரில், அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு(jai anmol ambani) ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் ஜெய் அன்மோல் அம்பானி செலுத்த வேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.