மோடி பரமாத்மா கதையை கொண்டு வந்ததே இதுக்கு தான் - கலாய்த்த ராகுல் காந்தி!
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு அக்னிபாத் திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "பிரதமர் மோடி பரமாத்மா கதையை ஏன் கொண்டு வந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?
ஏனென்றால்.. தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை அதானி பற்றி நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்கும்போது, எனக்குத் தெரியாது என்று அவர் சொல்வார். பரமாத்மாதான் இப்படி கேட்கச் சொன்னார் என்று நழுவிக் கொள்வார்.
அக்னிபாத் திட்டம்
நீண்ட தொடர்ச்சியான பேச்சுகளையும், நாட்டை பிளவுபடுத்துவதையும் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில், நாட்டின் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்புகளை பற்றி பீகார் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சொல்லுங்கள்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு அக்னிபாத் திட்டத்தை நீக்குவோம். ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்வோம். மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறப்போம். 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.