30 வருஷங்களா அந்த அழுத்தம்தான் - ஒருவழியாக.. திருமணம் குறித்து பேசிய ராகுல் காந்தி!

Rahul Gandhi Marriage
By Sumathi Aug 28, 2024 12:30 PM GMT
Report

திருமணம் குறித்து ராகுல் காந்தி மனம் திறந்துள்ளார்.

ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சில தினங்கள் முன் ஜம்மு - காஷ்மீரில் மாணவிகள் சிலருடன் கலந்துரையாடினார். அது தொடர்பான வீடியோ அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

rahul gandhi

அதில், மாணவிகளில் ஒருவர் ‘நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்’ என்று ராகுலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “கடந்த 30 ஆண்டுகளாக இந்த கேள்வியை நான் எதிர்கொண்டுவருகிறேன்.

எப்போதுமே வெள்ளை நிற T-shirt அணிவது ஏன் ? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!

எப்போதுமே வெள்ளை நிற T-shirt அணிவது ஏன் ? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!

திருமணம்?

இதனால் நான் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகிறேன். எப்போது திருமணம் என்ற கேள்வியை இப்போது நான் கடந்துவிட்டேன். எனது திருமணம் தொடர்பாக எந்த திட்டமிடலையும் நான் செய்யவில்லை. அது நடந்தால் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

30 வருஷங்களா அந்த அழுத்தம்தான் - ஒருவழியாக.. திருமணம் குறித்து பேசிய ராகுல் காந்தி! | Rahul Gandhi About His Marriage Video Viral

முன்னதாக பொதுமேடை ஒன்றில், பிரியங்கா காந்தி, “எப்போது திருமணம் செய்ய போகிறாய் என்று பெண்கள் கேட்கிறார்கள். அதற்கு பதில் வேண்டும்” என்று கேட்க, மிகவிரைவில் நடக்கும் என ராகுல் காந்தி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.