தற்காப்புக் கலையில் கலக்கும் ராகுல் -இதுவரை யாரும் பார்க்காத விடியோ!

Rahul Gandhi National Sports Day India
By Vidhya Senthil Aug 29, 2024 09:43 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் தற்காப்புக் கலையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்காப்புக் கலையில் கலக்கும் ராகுல் -இதுவரை யாரும் பார்க்காத விடியோ! | Rahul Engaged In Martial Arts National Sports Day

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற தியான் சந்த், 1925 முதல் 1949 வரையிலான ஆண்டுகளில் 185 போட்டிகளில் விளையாடி 1,500 கோல்களை இந்தியாவுக்காக அடித்துள்ளார். 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் அவர் விளையாடிய காலத்தில் இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள் கிடைத்தன.

மேலும் 1956-ம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டுக் கழகத்தில் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதோடு, ராஜஸ்தானில் உள்ள பல பயிற்சி முகாம்களில் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

திருமணம் எப்போது? மீண்டும் எழுந்த கேள்வி..ராகுல் காந்தி சொன்ன பதில்!

திருமணம் எப்போது? மீண்டும் எழுந்த கேள்வி..ராகுல் காந்தி சொன்ன பதில்!

வீடியோ வைரல்

அதன் பின் 1979ம் ஆண்டில் டிசம்பர் 3ம் தேதி அவரது 75ம் வயதில் காலமானார். இவரையும், இவரது பெருமையையும் கௌரவிக்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டில் இந்திய அரசு அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்தது.

இந்த நிலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் தற்காப்புக் கலையில் ஈடுபட்டு அவர்களுடன் உரையாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில் மேஜர் தயான்சந்த் ஜியின் பிறந்தநாளில் இந்திய விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் அர்ப்பணிப்புள்ள வீரர்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம், அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்திய விளையாட்டுகளைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கிறது என்று தெரிவித்துள்ளது.