ராகுல் டிராவிட் உடல்நிலை மோசம் - 3வது ஒருநாள் போட்டியில் பயணிப்பாரா?
ராகுல் டிராவிட் உடல்நலக் குறைவால் 3வது ஒருநாள் போட்டியில் இருப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட் தனது 50 வது ஆண்டு விழாவை இந்திய கிரிக்கெட் அணி உடன் கொண்டாடினார். இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து,
ஹோட்டலில் தங்கி இருந்த ராகுல் டிராவிட்க்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவருக்கு பிபி லெவலும் அதிகரித்ததாகவும், அதன் பிறகு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா, இலங்கை ஆகிய இரு அணிகளின் வீரர்களும் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் தொடர்ந்து விளையாடி வருவதால்,
உடல்நிலை மோசம்
கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் ஜனவரி 15 ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதனால், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பயணிப்பாரா என கேள்விகள் எழுந்த நிலையில், அவர் அணியுடன் பயணிக்க முடியாது என்று ஊகிக்கப்படுகிறது.