விண்ணை தீண்டும் கதிரவன் : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரானார் ராகுல் டிராவிட்!

teamindia headcoach rahuldravid
By Irumporai 1 வருடம் முன்

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே  பொறுப்பில் இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால்  புதிய தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை, புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்து பிசிசிஐ சற்று முன் அறிவித்துள்ளது. 

தற்போது பயிற்ச்சியாளராக உள்ள  ரவிசாஸ்திரி.  கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இவரது ,பயிற்சியாளர் ஒப்பந்தம் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழு அளித்த அறிவுரையின்படி, அவரது பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் இந்தாண்டின் இறுதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக தேடி வந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல்டிராவிட்டே நியமிக்கப்படுவார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியானது.

இந்நிலையில் தான அவர் தற்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் ஏற்கனவே இந்திய ஏ அணியின் பயிற்சியாளராகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ராகுல் டிராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவரது தலைமையில் இந்திய அணி 2007ம் ஆண்டு உலககோப்பை போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.