பொறுமையை இழந்த டிராவிட் - நடுரோட்டில் டிரைவரை வெளுத்து வாங்கிய வீடியோ!
ஆட்டோ ஓட்டுனருடன் டிராவிட் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியின் தலைமை பயிற்சியாளருமானவர் ராகுல் டிராவிட்.
இவர் பெங்களூருவில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அவரது கார் மீது ஆட்டோ ஒன்று உரசியதால், அவரின் காரில் கீறல்கள் விழுந்ததாக கூறப்படுகிறது.
வைரல் வீடியோ
இதனால் கோபமடைந்த ராகுல் டிராவிட், அந்த ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Rahul Dravid’s Car touches a goods auto on Cunningham Road Bengaluru #RahulDravid #Bangalore pic.twitter.com/AH7eA1nc4g
— Spandan Kaniyar ಸ್ಪಂದನ್ ಕಣಿಯಾರ್ (@kaniyar_spandan) February 4, 2025
அதில், கார் மோதிய பிறகு டிராவிட் தனது காரை பரிசோதிப்பதாகவும், ஆட்டோ ஓட்டுநருடன் சிறிய வாக்குவாதம் நடத்துவதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.