ராகுல்காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - 144 தடை!
ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தகுதி நீக்கம்
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது ராகுல் காந்தி இந்த பிரிவிலேயே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை கண்டித்து டெல்லி தொடங்கி அனைத்து மாநிலங்களில் உள்ள காந்தி சிலைகள், மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகங்கள் முன்னர் சத்தியாகிரக போராட்டம் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
அதன்படி, காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் சத்தியாகிரக போராட்டம் தொடங்கியது. இதில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதே வேளை, இந்த போரட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.