மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? இதுதான் காரணம் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
மோடி-அதானி தொடர்பு குறித்து தான் கேள்வி கேட்டேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்காளைச் சந்தித்தார். அதில், நாடாளுமன்றத்தில் மோடி-அதானி தொடர்பு குறித்து கேள்வி கேட்டதன் எதிரொலி என உணர்கிறேன்.
ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. அதானி குழும முதலீடுகளில் சீன நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. இந்திய அரசுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை கேட்டதாக கூறியது தவறு.
முழு நாடகம் இது
இந்தியாவை எந்த இடத்திலும் இழிவுபடுத்தி பேசவில்லை. ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகாளை ஆதாரத்துடனேயே முன்வைக்கிறேன். தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன்.
அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு 20,000 கோடி போனது யார் என்ற எளிய கேள்வியில் இருந்து பிரதமரைக் காக்க நடத்தப்படும் முழு நாடகமும் இதுதான். இந்த அச்சுறுத்தல்கள், தகுதி நீக்கம் அல்லது சிறை தண்டனைகள் குறித்து நான் பயப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.