வயநாடு நிலச்சரிவு..துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்!
வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராகும் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த வாரம் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் நிலச்சரிவு குறித்து ராகுல் காந்தி மக்களவையில் கூறியதாவது,
தேசிய பேரிடர்
பாதிப்புகள், இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம். கொள்கைகளை தள்ளிவைத்துவிட்டு அனைவரும் மீட்புப் பணியில் ஈடுபட்டது ஆறுதலான விஷயம். வயநாட்டிற்கு சென்று அங்குள்ள மோசமான நிலைமையை எங்கள் கண்களால் பார்த்தோம்.
200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புத் துறை மற்றும் அண்டை மாநிலங்களாக கர்நாடகம்,
தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்டவைகளின் உதவிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மீட்புப் பணிக்கு உதவி செய்தனர். வயநாட்டில் பேரிடரை தாங்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்கவும்,
மக்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கவும் நிதியுதவியை விடுவிக்குமாறும் கேட்டு கொள்கிறேன். மேலும், வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.