ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு? பொதுக்குழுவில் தீர்மானம்!

Indian National Congress Rahul Gandhi Tamil nadu India
By Sumathi Sep 19, 2022 08:43 AM GMT
Report

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

 ராகுல்காந்தி

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு? பொதுக்குழுவில் தீர்மானம்! | Rahul As Congress President In Tamil Nadu Too

இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 அகில இந்திய காங்கிரஸ் தலைவர்

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரை தேர்ந்து எடுக்க சோனியா காந்திக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு? பொதுக்குழுவில் தீர்மானம்! | Rahul As Congress President In Tamil Nadu Too

ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.