பாதயாத்திரை பயணம் - ரோட்டோர கடையில் இளநீர் குடித்த ராகுல்காந்தி - வைரலாகும் வீடியோ

Rahul Gandhi Viral Video
By Nandhini Sep 08, 2022 07:24 AM GMT
Report

பாதயாத்திரை பயணம் 2-வது நாளாக தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, வரும் வழியில் ரோட்டோர கடையில் இளநீர் குடித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடங்கியுள்ளார்.

2-வது நாளாக ராகுல்காந்தி பயணம்

பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல்காந்தி. அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்திலிருந்து நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, நடைபயணத்தில் ரோட்டோர கடையில் வியாபாரி இளநீர் கொடுக்க அதை ராகுல்காந்தி வாங்கி குடித்தார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

rahul gandhi - viral video