18 ஆண்டுகளுக்கு பின்.. சனியின் ராசிக்கு செல்லும் ராகு - இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்
18 ஆண்டுகளுக்கு பின், ராகு சனி பகவானின் ராசிக்கு செல்லவுள்ளார்.
சுமார் 18 மாதங்களுக்கு பின் ராசியை மாற்றும் ராகு, தனது நண்பனின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ராகு 2026 டிசம்ர் 05 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் குறிப்பாக, சில ராசிக்காரர்கள் திடீர் நிதி நன்மைகளை பெறவுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
தங்களின் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல புகழையும், மரியாதையையும் பெறுவார்கள்.
மிதுனம்
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்புறவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.