'அந்த மனசுதான் சார்' - நாடு திரும்பும் முன் சாலையோர ஏழைகளுக்கு உதவிய ஆப்கன் வீரர்!

India Afghanistan Cricket Team Rahmanullah Gurbaz ICC World Cup 2023
By Jiyath Nov 13, 2023 05:57 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், குஜராத் சாலையோர ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கத்துக்குட்டியாக பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

வலுவான அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்து தங்களது திறமையையும் ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியது. இந்த உலகக்கோப்பையில், லீக் சுற்று வாய்ப்பு நழுவி போனாலும் 9 ஆட்டங்களில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கும் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆபாக்கினிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

விராட் கோலியை நான் எதுக்கு வாழ்த்தணும்..? சிரித்தபடியே கொந்தளித்த இலங்கை கேப்டன்!

விராட் கோலியை நான் எதுக்கு வாழ்த்தணும்..? சிரித்தபடியே கொந்தளித்த இலங்கை கேப்டன்!

நெகிழ்ச்சி செயல்

இந்நிலையில் லீக் சுற்று முடிவடைந்து நாடு திரும்புவதற்கு முன்பாக அந்த அணியை சேர்ந்த வீரர் 'ரஹ்மனுல்லா குர்பாஸ்' அகமதாபாத் நகரில் தெருவோரத்தில் இருந்த சில ஏழைகளுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

தீபாவளி நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் நகரின் சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சில ஏழைகளுக்கு, தூக்கத்திலிருந்து எழுப்பாமலேயே அவர்களின் அருகில் 500 ரூபாய் தாள்களை வரிசையாக வைத்து குர்பாஸ் சென்றுள்ளார். இதை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் அவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.