அது ஒரு ஒப்பந்தம்தான்.. திருமணத்துக்கு முன்பே மனைவியிடம் சொன்ன ரஹ்மான்!

Tamil Cinema A R Rahman Divorce Social Media
By Swetha Nov 22, 2024 12:00 PM GMT
Report

தன் மனைவி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ரஹ்மான்

இந்தியா சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசை மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அது ஒரு ஒப்பந்தம்தான்.. திருமணத்துக்கு முன்பே மனைவியிடம் சொன்ன ரஹ்மான்! | Rahman Opens Up About Marriage Agreement With Wife

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இது திரைவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், கடந்த 2012ல் பிரபல தொலைக்காட்சி நேர்காணலில் ரஹ்மான் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில்,''29 வயதான நிலையில், திருமணத்துக்கு சரியான காலம் அதுதான் என்று முடிவு செய்தேன். எனினும், மணப்பெண்ணைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லாத நான், எனக்கேற்ற பெண்ணை பார்க்கும்படி தாயாரிடம் கூறியிருந்தேன்.

சண்டையே வராது..மனைவி மன்னிப்பு கேட்டாங்க..இப்போ வாழ பிடிக்கல - மனம்திறந்த ரஹ்மான்!

சண்டையே வராது..மனைவி மன்னிப்பு கேட்டாங்க..இப்போ வாழ பிடிக்கல - மனம்திறந்த ரஹ்மான்!

ஒப்பந்தம்..

எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும், நான் இசைப்பணியை செய்வதற்கு அதிகம் தொந்தரவு தராதவராக இருக்க வேண்டும்,'' என்று தன் தாயாரிடம் கூறி இருந்ததாக, ரஹ்மான் கூறுகிறார்.

அது ஒரு ஒப்பந்தம்தான்.. திருமணத்துக்கு முன்பே மனைவியிடம் சொன்ன ரஹ்மான்! | Rahman Opens Up About Marriage Agreement With Wife

'தன் மனைவியாக வரப்போகிறவர், கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அழகு, நிறைய பணிவு கொண்டவராக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். பிறகு மனைவியாக வந்த சாய்ராவின் குணம், நீங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கிறதா' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரஹ்மான், ''அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அமைதியாக இருப்பார். கோபம் வந்து விட்டால் அதைக்காட்டி விடுவார். அவருக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில், வெளியில் அழைத்துச் செல்வதில்லை என்பதால் அவர் விரக்தி அடைந்தார்.

''திருமணத்துக்கு முன்னரே, அவர் எத்தகைய வாழ்க்கையை என்னுடன் வாழ வேண்டியிருக்கும் என்பதை நான் அவரிடம் தெரிவித்து விட்டேன். அந்த வகையில் அது ஒரு முன்கூட்டியே செய்யப்பட்ட ஒப்பந்தம் போன்றது' என்று தெரிவித்துள்ளார்.