சூரரைப்போற்று படத்தை பாராட்டிய இந்தியா கிரிக்கெட் வீரர் ரஹானே
india
tamil
actor
cricketer
By Jon
சூரரைப் போற்று திரைப்படத்தில், சூர்யா சிறப்பாக நடித்துள்ளதாக இந்திய வீரர் அஜின்கியா ரஹானே தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள ரஹானே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் அவர் ஏதேனும் தமிழ் படங்கள் பார்த்துள்ளாரா என கேட்ட போது, சூரரைப் போற்று திரைப்படத்தை Subtitle உதவியுடன் தான் மிகவும் ரசித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை பார்க்கும் படி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து IBC Tamil
அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் IBC Tamil