கேப்டன் பதவியில் இருந்து விலகிய வீரர் - அடுத்தது இவர்தான்..

Shreyas Iyer Mumbai Indians Ajinkya Rahane
By Sumathi Aug 21, 2025 10:45 AM GMT
Report

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே விலகியுள்ளார்.

அஜிங்கியா ரஹானே

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமாகவும் இருப்பவர் அஜிங்கியா ரஹானே.

rahane

இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான ரஹானே, 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 85 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள், 26 அரைசதங்களுடன் 5,077 ரன்களையும்,

ஒருநாள் கிரிக்கெட்டில் 90 போட்டிகளில் 3 சதங்கள், 24 அரைசதங்களுடன் 2,962 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 375 ரன்களையும் எடுத்துள்ளார்.

ரோகித்துக்கு பின் அவர்தான் கேப்டன்; கில், பண்ட் இல்லை - இந்திய முன்னாள் வீரர்!

ரோகித்துக்கு பின் அவர்தான் கேப்டன்; கில், பண்ட் இல்லை - இந்திய முன்னாள் வீரர்!

பதவி விலகல்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக இதுவரை 198 போட்டிகளில் விளையாடியுள்ளார். மும்பை அணியின் கேப்டனாகவும் அஜிங்கியா ரஹானே செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரஹானே விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், "மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு, சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதையாக பார்க்கிறேன்.

தற்போது அடுத்த சீசன் உள்ளூர் போட்டிகள் தொடங்கவுள்ள காரணத்தால், அணியின் புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். எனவே நான் மும்பை அணியின் கேப்டன் பதவியில் தொடர வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.

இருப்பினும், ஒரு வீரராக எனது சிறந்ததை வழங்க உறுதியாக உள்ளேன். மும்பை அணியுடன் எனது பயணத்தை தொடர்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மும்பை அணியின் அடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.