பொதுமக்களுடன் அரசு பேருந்தில் பயணம் - மக்களை ஈர்க்கும் ராகுல் காந்தி
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடகா தேர்தல்
கர்நாடகாவில் வரும், 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால் அங்கு பல கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டுமென பிரசாரம் செய்துவருகின்றனர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பேருந்தில் பயணம் செய்து மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனத்தை ஈர்த்தார்.
மக்களுடன் மக்களாக
தொடர்ந்து, பெங்களூருவின் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றார்.

அங்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அவர் உரையாடினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு இலவச பேருந்து சேவை குறித்தும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்தும் எடுத்துக் கூறினார்.
அப்போது, பேருந்து பயணங்களில் தங்களுக்கு இருக்கும் சிரமங்கள் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் அவரிடம் பெண்கள் தெரிவித்தனர். இந்த பயணத்தில் நன்கு உள்ள மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.