மோடி ஜி பயப்பட வேண்டாம் - வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் - ராகுல் அட்வைஸ்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வங்கி கணக்குகள்..
காங்கிரஸ் கட்சியின் 4 முக்கிய வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக காங்கிரஸ்'ஸின் பொருளாளர் அஜய் மக்கான் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நேற்று தான் தாங்கள் வழங்கிய காசோலையை வங்கிகள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்ததாக கூறி, அது குறித்து விசாரித்ததில் இளைஞர் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது தெரியவந்தது என்றார்.
இளைஞர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து ரூ.210 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர், வங்கி கணக்குகளில் உள்ள கிரவுட் ஃபண்டிங்(Crowd Funding) பணம் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து, தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது என்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம் என விமர்சித்தார்.
இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,மோடி ஜி பயப்பட வேண்டாம், காங்கிரஸ் என்பது பண பலத்தின் பெயர் அல்ல மக்கள் பலத்தின் பெயர். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலைவணங்கவும் மாட்டோம்.
डरो मत मोदी जी, कांग्रेस धन की ताकत का नहीं, जन की ताकत का नाम है।
— Rahul Gandhi (@RahulGandhi) February 16, 2024
हम तानाशाही के सामने न कभी झुके हैं, न झुकेंगे।
भारत के लोकतंत्र की रक्षा के लिए हर कांग्रेस कार्यकर्ता जी जान से लड़ेगा।#DemocracyUnderAttack
இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸூம் பல்லையும் ஆணியையும் எதிர்த்துப் போராடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். எதிர்ப்புகள் கடுமையாக எழுந்த நிலையில், முடக்கிய அனைத்து கணக்குகளையும் வருமான வரித்துறை விடுதித்தது குறிப்பிடத்தக்கது.