ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் - 40, 50 இடங்களையாவது வெல்லுங்கள் - மோடி ஆதங்கம்..!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று பதிலளித்து பேசினார்.
பட்ஜெட் கூட்டம் மோடி உரை
நடப்பு ஆண்டின் இடைக்கால பட்ஜெட் கூட்ட தொடரில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் சிறப்பான ஆட்சியின் மூலம் இந்தியா, உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தை பிடித்திருக்கிறது என்று சுட்டிக்காட்டி, காங்கிரஸ், நாட்டை வடக்கு-தெற்கு என பிரித்தாள முயல்கிறது என்று விமர்சித்தார்.
எப்படி இருந்த காங்கிரஸ்
வரும் தேர்தலில் காங்கிரஸால் 40 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது காங்கிரஸ்'ஸின் மல்லிகார்ஜுன கார்கே பாஜக 400 இடங்களில் வெல்ல ஆசி வழங்கியுள்ளார் என்று விமர்சிக்க காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ், தற்போது இப்படி ஆகிவிட்டதே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரதமர், வரும் தேர்தலில் 40 இடங்களையாவது காங்கிரஸ் வெல்ல தான் பிராத்திக்கிறேன் என கூறினார்.