கொடுத்த 5 வாக்குறுதிகளை சட்டமாக மாற்றுவோம் - சொன்னதை செய்யும் ராகுல் காந்தி!
கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் நேன்று முதலமைச்சர் பதவியேற்பு விழா முடிந்ததும் தனது வாக்குறுதிகள் குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
பதவியேற்பு விழா
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சருக்கான பதவியேற்பு விழா நேன்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த விழாவில் பல அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
வாக்குறுதிகள்
இந்நிலையில், விழா முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது, காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்காது.
மேலும் இன்னும் 1-2 மணி நேரங்களில் கர்நாடகா அமைச்சரவை கூடி, 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டம் இயற்றப்படும்" என தெரிவித்தார்.
அந்த முக்கிய வாக்குறுதிகள், "குடும்பத்தலைவிகளுக்கு அதிகாரம் வழங்கவும், அவர்களின் வாழ்க்கையை அவர்களே முடிவெடுக்கவும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.
18- 25 வயதுகுட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3000 வழங்கப்படும். டிப்ளமோ படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் மற்றும் அனைத்து மகளிருக்கும் பேருந்தில் இலவச பயணம்" முதலியவற்றை சட்டமாக மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.